ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த 101 முதியவர்கள்.! - Seithipunal
Seithipunal


ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த 101 முதியவர்கள்.!

அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் "ஸ்கை டைவிங்| போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அறுபது வயதுக்கு மேல் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர். இந்தக் குழுவிற்கு "ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி" என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த குழு, நடுவானில் உருவாக்கம் செய்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்துள்ளது. 101 முதியவர்கள் கொண்ட இந்தக் குழு தங்களின் மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கியுள்ளனர். 

இந்தக் குழு முதன் முதலாக கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு "பெர்ரீசில் ஸ்கை டைவிக்" செய்து உலக சாதனை படைத்தது. அதன் பின்னர், 2018ம் ஆண்டு சிக்காகோவில் 75 பேரை கொண்டு இரண்டாவது சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது. 

தற்போது, இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு "ஸ்கை டைவிக்" செய்தது. இவர்கள் அனைவருக்கும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old mans break world record in america california


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->