மேலும் புதிதாக கண்டறியப்பட்ட இரு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்.! பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயர்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட , ஒமைக்ரான் தொடர்ந்து மரபணு மாற்றமடைந்து வருகிறது. மேலும், ஏராளமான நாடுகளில் புதிய வகை வைரஸ் ஆன ஒமைக்ரான் எக்ஸ்.இ வேகமாக பரவி வருகிறது. 

தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்க தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா தெரிவிக்கையில், "தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்களுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 பெயரிடப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் இந்த புதிய வகை வைரஸ்கள் தொற்று நோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன". என்று தென் ஆப்பிரிக்க தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

omicron variant more then two


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->