ஒமைக்ரான் தொற்றுக்கு உயிரிழப்பு அதிகம் இருக்கும்.! அதிர்ச்சி கொடுக்கும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள்.!
OMICRON VIRUS EFFECT
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்படுத்தி இருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணம் இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது தான்.
இந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலுக்கு பரவி, பின் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 59 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உருமாறிய இந்த ஒமைக்ரான் தொற்றுக்கு உயிரிழப்பு அதிகம் இருக்கும் என்று, உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் கணித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு உலகின் முதல் பலி இங்கிலாந்தில் பதிவாகி உள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உலகமெங்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபர்களும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.