நேபாளத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளப்பெருக்கு..! ஒருவர் பலி, 25 பேர் மாயம்...! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கிழக்கு நேபாள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதில் முக்கிய பகுதிகளான சங்குவசபா, ஹெவாகோலா பஞ்ச்தார் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் உள்ளூர் காவல் படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சங்குவசபா நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் 16 ஊழியர்கள் உட்பட 25 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் வெளியிட்டு அறிக்கையில், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One died and 25 missing due to rain and flood in nepal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->