ஸ்பெயின் : தேவாலயங்களில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் - ஒருவர் பலி - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராசில் உள்ள சான் இசிட்ரோ தேவாலயத்தில் வழக்கம்போல பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது சரமாரியாக தாக்கினார்.

இதனால் மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு தேவாலயத்தை விட்டு வெளியேறினர். பின்பு அருகாமையில் உள்ள நியூஸ்ட்ரா செனோரா டி லா பால்மா தேவாலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களையும் கத்தியால் கொடூரமாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிரியார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், மர்ம நபரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். ஆனால் அவரைப் பற்றிய இந்த தகவலும் காவல்துறையினர் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் மொரக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், பலியானவர் தேவாலயத்தில் பணியாற்றியவர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One died as stabbing in churches in spain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->