ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று.. ஒட்டுமொத்த நகரத்துக்கு ஊரடங்கு விதித்த சீனா.!
One person affected covid positive in china whole city lockdown
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்நாட்டின் வுகேங்க் என்ற நகரில் ஒரு நபருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்நகரத்திற்கு ஒட்டுமொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவல் தடுப்பு நோக்கில் அந்நகரத்தை சேர்ந்த யாரும் வரும் வியாழக்கிழமை வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது. அந்நாட்டின் மிகப் பெரிய உருக்கு ஆலை இந்த வுகேங்க் நகரில் தான் உள்ளது என்பதால் உருக்கு ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் பல்வேறு நகரங்களில் இது போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்நாட்டின் தினசரி பாதிப்பு 300இல் இருந்து 400 ஆக உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக சுமார் 25 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
One person affected covid positive in china whole city lockdown