சிங்கப்பூரில் சைக்கிளில் சென்ற முதியவரை லாரியால் மோதி கொன்ற இந்தியருக்கு 1 ஆண்டு சிறை.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் சைக்கிளில் சென்ற முதியவரை லாரியால் மோதி கொன்ற இந்தியருக்கு 1 ஆண்டு சிறை.!

சிங்கப்பூர் நாட்டில் ஜாலான் யூனோஸ் என்ற பகுதியிலிருந்து துவாஸ் நகருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை இந்தியாவைச் சேர்ந்த உடையப்பன் என்பவர் ஓட்டிச் சென்றார். 

இவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவர் லாரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவருக்கு வழி விடாமல் உடையப்பன் லாரியை விட்டு தடுக்க முயன்றனர். அப்போது லாரி எதிர்பாராத விதமாக சைக்கிளில் மோதியது. 

இந்த விபத்தில் சைக்கிளில் வந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் உடையப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த ராஜேந்திரனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one year jail punishment to indian man for kill old man in singapoore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->