ஆப்கானிஸ்தானிலிருந்து விடைபெறும் ஆன்லைன் நிறுவனங்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து அந்நாட்டின் ஏற்றுமதி, அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள் முற்றிலும் மாறியுள்ளன. மேலும் தாலிபான்களின் கடும் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்குகின்றன.

ஏற்கனவே இருந்த நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஆறு வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கிளிக்.ஆஃப் என்ற மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலை மேம்படும் பொழுது மீண்டும் தொடங்குவோம் என்று தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் பக்கல் என்ற மற்றொரு வணிக நிறுவனம் மற்றும் ஆன்லைன் டாக்ஸி சேவை 'புபர்' தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தாலிபான்கள் வங்கி துறையின் மீது நிறுவப்பட்ட கட்டுப்பாடுகளே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online shopping services shutdown operations in Afghanistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->