பாகிஸ்தான் - சீனா நட்பை பயங்கரவாத்தாதல் கூட பிரிக்க முடியாது; ஆசிஃப் அலி சர்தாரி..!
Pakistan and China friendship cannot be separated says Asif Ali Zardari
பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான நட்பை பயங்கரவாத தாக்குதலால் கூட முடிவுக்கு கொண்டு வரமுடியாது என பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆசிஃப் அலி சர்தாரி கூறுகையில் "பாகிஸ்தான் மற்றும் சீனா எப்போதும் நட்பு நாடுகளாக இருக்கும். எந்த காலத்திலும் நட்பு நாடுகளாக இருக்கும். உலகில் எத்தனை பயங்கரவாதங்கள், எத்தனை பிரச்சனைகள் எழுந்தாலும் நான் நிற்பேன், பாகிஸ்தான் மக்கள் சீன மக்களுடன் நிற்பார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்பில் ஏற்றம் இறக்கும் இருக்கும். ஆனால், இது பயங்கரவாத தாக்குதல்களால் உடையாது" என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, 04 நாள் சுற்றுப் பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த பல ஊழியர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சீனாவைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஆசிஃப் அலி சர்தாரி அவ்வாறு தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில்,பாகிஸ்தானில் பல கோடி ரூபாய் அளவிலான போக்குவரத்து கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் சீனா ஊழியர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan and China friendship cannot be separated says Asif Ali Zardari