ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளை (8-ந்தேதி) உலகம் முழுவதும் இந்து மக்களால் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தற்போதே பல இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை கொண்டாடியுள்ளனர்.

சுமார் 30 இந்து சமய மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஹோலி பண்டிகையில், முகத்தில் வண்ண பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்நேரம் இந்து மாணவர்களை ஹோலி பண்டிகை கொண்டாடக்கூடாது என்று, ஒரு அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இந்து மாணவர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். 

மேலும், கேத் குமார் என்ற மாணவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக காயம்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதற்கிடையே, இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதற்க்கு துணைவேந்தர், "சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட சம்மந்தப்பட்ட மாணவர்கள் அனுமதி பெறவில்லை" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Hindu Holi Celebration college student attacked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->