ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் வழங்கிய சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடர்ந்து 7 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் உதவி வருகிறது.

மேலும் உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளின் தூதரகங்கள் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாகிஸ்தான் வழங்கி வருவதாக ஐரோப்பாவை சேர்ந்த ஜியோ-பொலிடிக் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள டி.எம்.ஐ. அசோசியேட்ஸ் நிறுவனம் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வரும் பல்கேரியாவை சேர்ந்த டிபன்ஸ் இண்டஸ்ட்ரி குரூப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், ஆயுதங்கள் வழங்கி வந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் ஆயுத விற்பனையாளரான கெஸ்டிரால் நிறுவனம், உக்ரைன் ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி வரும் சுலோவேக்கியாவை சேர்ந்த கெமிக்கா நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலையாக இருந்து வந்த பாகிஸ்தான், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan in controversy as it supplies arms to Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->