ஐ. நா. வில் ரகசிய வாக்கெடுப்பு - மீண்டும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது பாகிஸ்தான்!
Pakistan in U N Security Council
ஐ. நா. சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நாடுகளை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கெடுப்பில் மொத்தம் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் உறுப்பினர் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி 2026ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது.
ஐ. நா. சபையில் நடந்த வாக்கெடுப்பில் ஆப்பிரிக்கா கண்டத்திற்கான வாக்கெடுப்பில் சோமாலியா 179 வாக்குகளும் மற்றும் ஆசியா - பசிபிக் கண்டங்களுக்கான வாக்கெடுப்பில் பாகிஸ்தான் 182வாக்குகளும் பெற்றன. மேலும் ஐரோப்பா கண்டங்களுக்கான வாக்கெடுப்பில் டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.
கரீபிய மாநிலங்களுக்கான வாக்கெடுப்பில் பனாமா 183 வாக்குகளை பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது பெருமைக்குரிய நிகழ்வு என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் 8வது முறையாக ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan in U N Security Council