டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி : இந்தியாவுக்குத் தொடர்பு - பாக். நிருபரின் 'பகீர்' குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal



பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜஹான்சயீப் அலி, அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மறைமுகமாக இந்தியா மீது குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். 

அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் பென்டகனில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஜஹான்சயீப் அலி, " நிறைய செய்திகளில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி வெளிநாட்டு சதி என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே ஒரு வெளிநாட்டு  அரசும், அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவும் இணைந்து கனடா மற்றும் நியூ யார்க்கில் அமெரிக்கர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தது. அந்த வகையில் பார்த்தால் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி தாக்குதலிலும் அதே போல் ஏதேனும் வெளிநாட்டுக்கு தொடர்பிருக்கலாம் என்று நீங்கள் சந்தேகப் படுகிறீர்களா?" என்று கேட்டார். 

அதற்கு ஜெனரல் பேட்ரிக் ரைடர் , "நீங்கள் தாக்குதல் தொடர்பான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தொடர்பான கேள்விகளை நீங்கள் FBI மற்றும் ரகசிய புலனாய்வு அமைப்புகளிடம் தான் கேட்க வேண்டும். ராணுவத்திடம் அல்ல" என்று பதிலளித்துள்ளார். 

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் மீது அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரியும், ரா அமைப்பின் முன்னாள் தலைவருமான விக்ரம் யதாவுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்க  ஊடகங்கள் குற்றம் சாட்டின. அதை தான் இப்போது மறைமுகமாக அமெரிக்க நிருபர் ஜஹான்சயீப் அலி குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Journalist Accusation India in Donald Trump Murder Attempt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->