ராணுவம், நீதித்துறையை அவதூறு செய்தால் 5 ஆண்டு சிறை விதிக்க பாக்., அரசு திட்டம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கடந்த மாதம் பிரதமர் அலுவலகம் உள்ள சாலையில் நடந்த தாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக நடந்து வரும் குண்டுவெடிப்புகளால் உலக நாடுகளின் மத்தியில் பாகிஸ்தான் மீது எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் நீதிமன்றம் மற்றும் ராணுவத்தின் மீது அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக மசோதா ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.

அதில் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், சில குறிப்பிட்ட வழக்குகளில் 10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் வாரன்ட் இன்றி கைது செய்யப்படுவார்கள் என்றும், ராணுவம் மற்றும் நிதி துறையை கேலி செய்யும் வகையில் அறிக்கை வெளியிடுவது மற்றும் தகவல் பரப்புவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வரைவு மசோதா சட்டம் நீதி அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் பெறுவதற்காக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan plan for 5 years jail for defamation of army and judiciary


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->