பாடமே நடத்தாமல் சம்பளம் வாங்கிய ஆசிரியர்கள்.. எங்க தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆசியா கண்டத்திலேயே மாணவ மாணவிகளுக்கு தரமுடைய கல்வி வழங்காத மோசமான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. அதேபோல், கடந்த 2017-ம் ஆண்டில், பாலின சமத்துவத்தில் இரண்டாவது மோசமான நாடாக பாகிஸ்தான் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்று தி நேசன் பத்திரிகை தெரிவித்திருந்தது. 
அதிலும் குறிப்பாக, அந்த நாட்டில் பெண்கள் கல்வி கற்பதில் பல தடைகள் உள்ளன. 

கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, பாலின அதிகாரமளித்தலில் 94 நாடுகளில் பாகிஸ்தான் 92-ம் இடமும் பாலினம் தொடர்புடைய வளர்ச்சி குறியீட்டில் உள்ள 146 நாடுகளில் 120 இடம் வகித்து இருந்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் நாட்டு சமூகத்தில் ஆண் வர்க்கம் சார்ந்த விசயங்கள் வேரூன்றி காணப்படுவதால், ஆண்களுக்கு பணியும், சம்பளமும் வழங்கப்படும் நிலையில், வீடு மற்றும் குழந்தைகளை கவனித்தல் உள்ளிட்ட சம்பளம் இல்லாத பணிக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். 

இதன் காரணமாக, குடும்பமோ அல்லது அரசாங்கமோ அந்த நாட்டில் பெண் கல்விக்கு குறைந்த அளவு முதலீடே செய்ய கூடிய சூழல் காணப்படுகிறது. பாலின சமத்துவம் இல்லாத சூழலால் பெண்கள் கல்வி பெறுவதிலேயே அதிக சிரமம் உள்ளது. இதன்பின்னர், பெண்கள் கல்வி பெறும் நிலை அமைந்து, படித்து வருவது என்பது வேறு விசயத்தில் வரும். 

இந்நிலையில், அந்த நாட்டில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வேனா என்ற இடத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பழங்குடியின தலைவர்களின் ஒத்துழைப்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளிருக்கான டிகிரி கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது.

ஆனால், இந்தக் கல்லூரியில், பணியாற்றும் பேராசிரியர்கள் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு கல்வி கற்று தரும் பணியை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, மிகவும் மோசமான முறையில், பேராசிரியர்கள் கல்வி பணியை செய்யாமல் மாதாமாதம் சம்பளம் வாங்கி செல்கின்றனர். மேலும்,  அவர்கள் கல்லூரிக்கே வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மாணவிகளுக்கு பாடம் கற்று கொடுக்காமல் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அதன் படி, மாதம் ஒன்றுக்கு சம்பளம் என்ற வகையில் ரூ.4 கோடி பாகிஸ்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan teachers salry without teaching


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->