பொருளாதார நெருக்கடி : பாகிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், உணவு தானியங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவலின்படி, ராணுவத்திற்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் ராணுவ இயக்குநர் ஜெனரல் உள்ளிட்டோருடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

பாகிஸ்தான் நாட்டில் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதும் பணவீக்கம் ஏறிக்கொண்டே உள்ளது. மேலும், நாட்டில் வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakisthan army unable to properly food for economic crisis


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->