தந்தையை 4-வது திருமணம் செய்தேனா.?! சம்மந்தப்பட்ட பெண் சுவாரஸ்ய பேட்டி., வீடியோ வைரல்.!
Pakisthan women 4th marriage viral Video Goes wrong
பாகிஸ்தானைச் சேர்ந்த ராபியா என்ற பெண் தனது தந்தையை மணந்ததாக ஒரு தகவல் உலகம் முழுவதும் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது உண்மை இல்லை என்று ராபியா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்த ராபியா என்ற பெண் தனது தந்தையை நான்காவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இந்த செய்தி நாடு தாண்டி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. கடுமையான சட்ட திட்டங்கள் கடைபிடிக்கப்படும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இப்படி ஒரு சம்பவமாக என்று பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது இந்த செய்தி.
மேலும் இந்த தகவலை தொடர்ந்து ராபியாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. இந்த விஷயம் குறித்து ஒரு பேட்டியில் ராபியா பேசிய போது அவரது திருமணம் குறித்து வெளியான தகவல் ஒரு வதந்தி என்பது தெரிய வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் நான்காவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ராபியா என்று பெயர் வைப்பார்களாம்.
ஆனால் தனது பெற்றோர்களுக்கு இரண்டாவதாக பிறந்த இவருக்கு ராபியா என்று அவர்கள் பெயர் வைத்து விட்டனராம். எனவே நான் என் பெற்றோர்களுக்கு நான்காவது மகளாக பிறந்திருக்கு வேண்டுமென ஆசைப்பட்டேன் எனவும், அது முடியாத காரணத்தால் நான் நான்காவதாக யாருக்காவது மனைவியாக வேண்டும் என ஆசைப்பட்டேன் எனவும், எனது விருப்பம் தற்போது நிறைவேறி உள்ளது என்றும் வேடிக்கையாக ராபியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராபியா தனது தந்தையை மணக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
English Summary
Pakisthan women 4th marriage viral Video Goes wrong