3 நாள் போர் நிறுத்தம் முடிவருவதற்கு முன்பே தாக்குதல்..! மீண்டும் கலவர பூமியாக மாறிய சூடான்...! - Seithipunal
Seithipunal


வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த இரண்டு மாதங்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் இதுவரை பொதுமக்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி சூடானிலேயே வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். 

மேலும் தாக்குதலினால் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் பெரும்பால இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்திற்காக ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதனிடையே இந்த வாரத் தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியதை தொடர்ந்து மனிதாபிமான நெருக்கடி ஏற்படாமல் இருக்க, சூடானில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே துணை ராணுவ படைகள் சூடானின் கார்ட்டூமிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து துணை ராணுவ படைகளின் மீது ராணுவ படைகள் போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இரு தரப்பினருக்கும் கடும் துப்பாக்கி சூடும், தெற்கு சூடானில் கோர்டோபான் பகுதியில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதலும் நடைபெறுவதால் அப்பகுதியை கலவர பூமியாக காட்சியளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramilitary attacks before 3 day ceasefire ends in Sudan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->