கியூபாவில் பற்றி எரியும் காட்டுத் தீ.! நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


கியூபாவில் பரவி வரும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடான கியூபாவில் ஹோல்குயின் மாகாணத்தின் பினாரெஸ் டி மயாரி வனபகுதியில் நேற்று முன்தினம் காட்டுத்தீ பரவத் தொடங்கியது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை நிலை காரணமாக காட்டுத்தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வனப்பகுதியை சுற்றியுள்ள விவேரோ, பியூப்லோ நியூவோ, லா மென்சுரா ஆகிய நகரங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் இதுவரை 150 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் நெருப்பை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கியூபா அரசு தெரிவித்துள்ளது. மேலும் 8480 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பிரபல மென்சுரா-பைலோட்டோ தேசிய பூங்காவை காட்டு தீ நெருங்கி வருவதால் அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People evacuted as Wildfire ravages in cuba


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->