ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஜப்பான் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரிய ஷின்ஜோ அபேயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வருகிற 27-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் உலக தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆனால் ஷின்ஜோ அபேவுக்கு அரசு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பி, நேற்று தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நினைவு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியும், ஷின்ஜோ அபேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து 70 வயது முதியவர் ஒருவர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People protesting against hold a memorial for Shinzo Abe in japan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->