லெபனான் :: வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள்.! வன்முறையில் ஈடுபட்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான லெபனானில் பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான உள்நாட்டு ரூபாயின் மதிப்பு குறைந்ததால் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல், அமெரிக்க டாலர்கள் மற்றும் லெபனான் பவுண்டுகளில் பணம் பெறுவதற்கு வங்கிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் டாலருக்கு நிகரான மதிப்பில், லெபனான் பவுண்டின் விலை 98 சதவீதம் வீழ்ச்சியடைந்ததையடுத்து வங்கிகளில் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளாக வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதித்து வரும் முறையற்ற கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் சாலை மறியலிலும், வன்முறையிலும் ஈடுபட்டனர்.

இதில் லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் உள்ள முக்கிய வங்கிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் அப்பகுதியை கலவரமாக காட்சியளித்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People resorted to violence if bank withdrawal restrictions were imposed in Lebanon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->