சீனாவில் குரங்கம்மைக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனை செய்ய அனுமதி! - Seithipunal
Seithipunal


குரங்கம்மைக்கு எதிராக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனை செய்ய, அந்நாட்டு நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

எம் பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கம்மையைத் தடுக்கும் விதமாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து  குரங்கம்மையை போக்க சில தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதன்முதலில் குரங்கம்மைக்காக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை ஆய்வக சோதனைக்கு உட்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள சீன நாட்டின் தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஷாங்காய் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம் வாயிலாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசி குரங்கம்மையை குணப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. இந்த தடுப்பூசியை சோதனை செய்து பார்க்க அனுமதி உள்ளது.

பொதுவான சந்தை அங்கீகாரத்தை ஒரு தடுப்பூசி பெற 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான காலத்தை உடனே நிர்ணயிக்க முடியாது. தடுப்பூசிகள் சந்தைக்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Permission to test a vaccine against monkeypox in China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->