முடிசூட்டப்பட்ட இங்கிலாந்து "மன்னர் 3ம் சார்லஸ், ராணி கமிலா"... பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்(96) காலமானார். இதையடுத்து ராணி 2-ம் எலிசபெத் மகனும், இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மன்னர் 3-ம் சார்லசுக்கும், அவரது மனைவியும், ராணியுமான கமிலாவிற்கும் நேற்று (மே 6-ம் தேதி) பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் முடிசூட்டப்பட்ட மன்னர் 3ம் சார்லஸ், ராணி கமிலாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்,

" மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுப்பெறும் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi congratulates England King Charles III Queen Camilla on coronation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->