ஜி20 மாநாடு: இத்தாலி பிரதமர் மெலோனியை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.!
PM Modi meets Italian PM Meloni at G20 Summit
ஜி2 உச்சி மாநாடு, இந்தோனேசியாவில் பாலி நகரில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் மெலோனியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. எரிசக்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் காலநிலை மாற்ற ஊக்குவிப்பு போன்ற துறைகளில் இந்தியாவும் இத்தாலியும் எவ்வாறு நெருக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
மேலும் பொருளாதார இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
PM Modi meets Italian PM Meloni at G20 Summit