இந்தியா உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக விளங்கும் - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


இந்தியா உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக விளங்கும் - பிரதமர் மோடி பேச்சு.!

தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டிற்கு அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பின் பேரில், பிரதமர் மோடி 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து பிரதமர் மோடிக்கு பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:- "உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. 

நிச்சயம் உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இன்று யு.பி.ஐ. தொழில்நுட்பம் தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. 

சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi speach in south africa BRICS summit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->