இந்தோனேசியா : காவல்நிலையத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்.! போலீஸ் அதிகாரி பலி.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அதிகாரி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் கட்டிடத்திற்குள் இன்று காலை 8:20 மணியளவில் கத்தியுடன் புகுந்த நபர் சிறிது நேரத்திலேயே தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 6 போலீசார் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரும் உடல் சிதறி உயிரிழந்தார். 

இதையடுத்து போலீசார் இந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police officer Killed Suicide Bombing At Indonesia Police Station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->