ஏழைநாடுகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


'ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்வதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை அமைக்க வேண்டும்,' என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புத்தாண்டு தினத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள், எந்தவொரு நாடும் மக்களும் கடனினால் நசுக்கப்படக்கூடாது. எங்கள் தந்தையிடம் நாம் எப்போதும் கேட்பது போல், கடனை முதலில் மன்னிப்பவர் கடவுள். ஆகையால் ஏழை நாடுகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏழ்மையான நாடுகளின் கடன்களை ரத்து செய்வதன் மூலம் அல்லது கணிசமாகக் குறைப்பதன் மூலம் முன்னுதாரணமாக இருக்கும்படி கிறிஸ்தவ பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசியுள்ளார்.

அதாவது, உலகெங்கிலும் உள்ள மோதல்கள் நிறைந்த பகுதிகளில், நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கு ராஜதந்திர ரீதியாக உழைக்கும் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மோதலால் பாதிக்கப்பட்ட பல பிராந்தியங்களில், பேச்சுவார்த்தைகளை நடத்துபவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. அனைத்து சண்டைகளும் முடிவுக்கு வரவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் தீர்க்கமான கவனம் செலுத்தவும் பிரார்த்தனை செய்வோம் என அனைவரிடமும் போப் பிரான்சிஸ் கோரியுள்ளார்.

மேலும், போர் அழிவை நோக்கிதான் செல்லும், அது எப்போதும் அழிவைதான் தரும். போர் எப்போதும் தோல்வி தான். அமைதிக்காக பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புத்தாண்டு தினத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poor countries debts should be canceled Pope Francis urges the countries of the world


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->