போப் பிரான்சிஸ் உடல் நிலை மீண்டும் பின்னடைவு..கிறிஸ்தவர்கள் பிராத்தனை!
Pope Francis health deteriorates again Christians pray!
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ்க்கு சுவாச பாதையில்தொற்றுஏற்பட்டுநிமோனியாபாதிப்புஏற்பட்டிருந்தது,கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
88 வ வயதான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது .மேலும் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pope Francis health deteriorates again Christians pray!