மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு...!
Powerful Earthquake in Mexico
மெக்சிகோவின் கபோ சான் லூகாஸ் அருகே அதிகாலை 2 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கபோ சான் லூகாஸ் ரிசார்ட்டுக்கு கிழக்கே 81 மைல் (131 கிலோமீட்டர்) தொலைவில் கலிபோர்னியா வளைகுடாவில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இதற்கு முன்பாக கடந்த மே மாதம் 18ஆம் தேதி 6.4 ரிக்டர் அளவில் மெக்சிகோவில் குவாத்தமாலாவின் கேனிலா நகராட்சிக்கு தென்கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Powerful Earthquake in Mexico