பிலிப்பைன்ஸை தாக்கிய சக்தி வாய்ந்த நோரு புயல்.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் வடகிழக்கு பகுதியான கியூஸான் மாகாணத்தின் பா்டியோஸ் நகரத்தை சக்தி வாய்ந்த நோரு புயல் தாக்கியுள்ளது. இதனால் மணிக்கு 195 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் கரையை ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் படகுகள் தூக்கி வீசப்பட்டன.

மேலும் நோரு புயல் பிலிப்பைன்ஸின் சியர்ரா மத்ரே மலைப் பகுதியை கடக்கும் பொழுது வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், புயல் ஆக்ரோஷமாக நகா்ந்து வருவதாகவும், லுஸான் தீவு வழியாக தென்சீனக் கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் புயல் நகர்ந்து வரும் பாதைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் மணிலா உட்பட பல நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மீன்பிடி படகுகள் மற்றும் தீவுகளுக்கு இடையேயான சரக்கு படகுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful Typhoon noru attacks Philippines


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->