உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம் - அதிபர் புதின் உத்தரவு - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உதவி வருகின்றது.

இதற்கிடையே 10 மாதங்களாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் வசிப்பவர்கள் உட்பட பலர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதால் ஜனவரி 6 மற்றும் 7 அன்று தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாக புதின் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Putin orders 2 days ceasefire in Ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->