டோனட்ஸ்க் பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் - அதிபர் ஜெலன்ஸ்கி
President Zelensky says war intensifies in donetsk region
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.
இதனால் இரண்டாம் கட்ட தாக்குதலை தொடர்ந்துள்ள ரஷ்யப்படைகள், உக்ரைனின் முக்கிய நகர பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின் டோனட்ஸ்க் பகுதியில் போர் தீவிரமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போரில் உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று ஆக்கிரமிப்பு பகுதிகளை கைப்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கெர்சன் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யப்படைகள் ட்ரோன்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
President Zelensky says war intensifies in donetsk region