மோடியின் பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிபிசி நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் அப்போதைய குஜராத் முதல்வரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் ஆவணப் படத்தை வெளியிட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் பிபிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். 

இந்தப் போராட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிபிசிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டு பிபிசி நிறுவனத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அந்த பதாகைகளில் "பிபிசி ஒரு போலி ஒளிபரப்பு நிறுவனம், பிரதமர் மோடிக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பொய், ஒரு தலைப்பட்சமான ஆவணப்படத்தை இந்தியர்கள் நிராகரிக்கின்றனர்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோவை தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protests in America against Modi BBC Documentary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->