ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது மகள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது மகள் உயிரிழந்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இப்போரில் உக்ரைன் மற்றும் நேட்டோ படைகள் இணைந்து நடத்தும் தாக்குதலை ரஷ்யா எளிதாக முறியடித்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய அதிபர் புடினின் மூளையாகவும், முக்கிய ஆலோசராகவும் செயல்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறி வைத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டார்.

அரசியல் விமர்சகராவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வந்த அலெக்சாண்டர் டக்கின் மகள் டார்யா டகினா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் தந்தையின் காரில் செல்லும் பொழுது காரில் முன்கூட்டியே பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin consultant Alexander Dugin daughter killed in car bomb attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->