அணு ஆயுதப் போரை தவிர்க்கவே ரஷ்யா விரும்புகிறது - புதின்
Putin says Russia wants to avoid nuclear war
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நடைபெறும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படைகள் இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது.
மேலும் ஜபோர்ஜியா பகுதியில் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் உக்ரைனின் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி குழுமம் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுத நிலைப்பாடு தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.
மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதப் போரை தூண்டி விடக்கூடாது என்றும், அணு ஆயுதப் போர் எந்த சூழ்நிலையிலும் நிகழக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அணு ஆயுதப் போரை தவிர்க்கவே ரஷ்யா விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.
English Summary
Putin says Russia wants to avoid nuclear war