தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!! உச்சகட்ட பதற்றத்தில் எகிப்து எடுத்த அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நீடித்து வரும் போரால் இரு தரப்பிலும் கடுமையாக உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்தும் வான்வழி தாக்குதலால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. 

குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு காசாவில் இருந்து இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் குறிப்பிட்ட பாதை வழியாக மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் காசா - எகிப்து இடையிலான ராஃபா கிராசிங் எல்லை மக்கள் வெளியேறுவதற்காக இன்று திறக்கப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. காசா எல்லையில் இருந்து மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் காசாவில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்காக திறக்கப்பட்டுள்ளது.

ராஃபா எல்லை வழியே மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தெற்கு எல்லைக்கு செல்ல வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. காசாவில் இரட்டைக் குடியுரிமை உள்ள மக்கள் எல்லைக்கு செல்ல சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rafah crossing between Gaza and Egypt opens today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->