சாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரசுக்கு வழிகாட்டியாக உள்ளது - ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நேற்று நடந்த அரசியலமைப்பு மாநாட்டில் கலந்துக்க கொண்டு பேசினார். 

அப்போது அவர் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தினார்.அதாவது, "நாட்டில் 90 சதவீத மக்கள் அமைப்புக்கு வெளியே இருக்கிறார்கள். திறன், அறிவு பெற்ற அவர்களுக்கும், அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

அதனால்தான் ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நாங்கள் எழுப்புகிறோம். நாட்டின் அரசியல் சாசனம் வெறும் 10 சதவீதத்தினருக்கு மட்டும் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவின் யதார்த்தத்தில் கொள்கைகளை வகுக்க முடியாது.

அரசியல் சாசனத்தைப்போல சாதிவாரி கணக்கெடுப்பும் காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மூலம் அரசியல்சாசனத்தை பாதுகாக்க விரும்புகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi speech about caste wise censes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->