புதினுக்கு புரியவைத்த பிரதமர் மோடி.! அமெரிக்கா புகழாரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி, இதுவரை முடிவுக்கு வராத நிலையில் உள்ளது. இந்த போரால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் புதினுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, போருக்கான சகாப்தம் இதுவல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார். சமீபத்தில் இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று  முடிந்தது. 

இது தொடர்பாக வெளியான கூட்டறிக்கையில், "அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்கும் சர்வதேச சட்டம் மற்றும் பலதரப்பு நடைமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில், போருக்கான சகாப்தம் இதுவல்ல என்று பிரதமர் மோடி, ரஷ்ய பிரதமர் புதினிடம் கூறிய செய்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கேரீன் ஜீன்-பியார்ரே தெரிவிக்கையில், "தற்போது நாம் ஒரு வெற்றிகர ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். அப்போது, பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபரிடம், அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். 

பின்னர், இருதரப்பும் ஏற்று கொள்ள கூடிய வகையிலான உச்சி மாநாட்டின் இறுதி அறிவிப்புக்கு, இந்தியா ஒரு முக்கிய பங்கு வகித்தது. அப்போது, போருக்கான சகாப்தம் இதுவல்ல என்று பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி விட்டார்" என்று பியார்ரே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashya ukraine war prime minister modi clarify putin america praise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->