கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடையை நீக்க ஐநா சபையில் தீர்மானம்.! - Seithipunal
Seithipunal


1962-ம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான வர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார கட்டுப்பாடுகளுடன் கூடிய தடைகளை கியூபா மீது அமெரிக்கா விதித்தது.

இதனால் பொருளாதார, வணிக மற்றும் நிதித் தடையானது அந்நாட்டின் பொருளாதார நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கியூபா மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது.

இந்நிலையில் ஐ.நா. சபையில் 30வது ஆண்டாக அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக கியூபா வரைவு தீர்மானத்தை சமர்ப்பித்தது. 

இந்த தீர்மானத்தை ஆய்வு செய்யும் கூட்டத்தில் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் வாக்கெடுப்பில் சிங்கப்பூர், டொமினிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 185 நாடுகள் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்தன. 

பிரேசில் மற்றும் உக்ரைன் வாக்களிக்கவில்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resolution in the UN Council to lift the US economic embargo on Cuba


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->