பெண்களுக்கு கல்வி பயில தடை : கல்வி இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்ய முடியவில்லை - ரிஷி சுனக்.!  - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி செய்யும் தலீபான்கள் பெண்களுக்கான சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகிறார்கள். அதில் ஒருபகுதியாக தற்போது, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த செய்தி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலநாட்டில் உள்ள தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

"இரண்டு மகள்களுக்கு தந்தை என்பதன் அடிப்படையில், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிற ஒரு உலகத்தை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு வழங்குவதற்கு என்று  நிறைய உள்ளது. 

அவ்வாறு இருக்கும் போது, அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது மிகப்பெரிய பின்னடைவு ஆகும். இதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. 

தலீபான்களை, அவர்களின் செயல்களின் அடிப்படையில் நாம் தீர்மானிப்போம்" என்று அந்த பதிவில் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரிஷி சுனக்கிற்கு கிருஷ்ணா, அனுஷ்கா என்று இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rishi sunak twiter post for talibans ban womans higher education


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->