சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வந்தால் "நாடு கடத்தப்படுவார்கள்" - ரிஷி சூனக் எச்சரிக்கை
Rishi sunak warns If you come to England illegally you will be deported
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் வருபவர்களை தடுப்பதற்காக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய லண்டனில் உள்ள டவுனிங் ஸ்ட்ரீட் ப்ரீஃபிங் அறையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய பிரதமர் ரிஷி சுனக், சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் வருபவர்களை, வாரங்களில் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்புவோம் அல்லது ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக நீங்கள் இங்கு வந்தால், நீங்கள் புகலிடம் கோர முடியாது. நீங்கள் போலியான மனித உரிமைக் கோரிக்கைகளைச் செய்ய முடியாது மற்றும் நீங்கள் தங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு படகுகள் மூலம் 28 ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இதையடுத்து கடந்தாண்டு 45,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் தென்கிழக்கு இங்கிலாந்தின் கடற்கரைக்கு வந்தனர். இது 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வரும் ஆபத்தான பாதையில் புலம்பெயர்ந்தோரின் 60 சதவீதம் அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rishi sunak warns If you come to England illegally you will be deported