பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பை கிடங்காக மாறிய டிரினா நதி.!
River Trina turns into landfill due to plastic
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா-ஹெர்சகோவினாவின் எல்லைப் பகுதியில் முக்கிய நதியாக கருதப்படும் 'டிரினா' பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
போஸ்னியாவை சுற்றி அமைந்துள்ள நாடுகளிலிருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் டிரினா ஆற்றில் வந்து சேர்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், துருப்பிடித்த பீப்பாய்கள், பயன்படுத்தப்பட்ட டயர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், டிரிஃப்ட்வுட் மற்றும் பிற குப்பைகளால் டிரினா நதி காணப்படுகிறது.
மேலும் போஸ்னியா, செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவில் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்ந்து ஆற்றின் ஒரு பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. டிரினா நதி பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்டிருப்பதால், நதியில் வாழும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
English Summary
River Trina turns into landfill due to plastic