900 அடி உயரத்தில் அறுந்த ரோப் கார்.! பள்ளி மாணவர்களின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


900 அடி உயரத்தில் அறுந்த ரோப் கார்.! பள்ளி மாணவர்களின் கதி என்ன?

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவான் பகுதியில் பட்டகிராம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை போக்குவரத்து வசதிகள் இல்லாததால், ரோப் கார் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் 7 மாணவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் ரோப் கார் மூலம் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரோப் காரின் ஒரு கம்பி அறுந்தது. 

இதனால், ரோப் கார் பாதியில் நின்று, அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, அவர்கள் விரைந்து வந்து 8 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அந்தரத்தில் சிக்கிய மாணவர்களில் ஒருவர் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் பலத்த காற்றும் வீசுவதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rope car wire cut in pakisthan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->