குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி; விசாரணையில் சிக்கும் கேரள நர்ஸ்சுகள்!
Rs 700 crore fraud at Kuwait Bank Kerala nurses under investigation
கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான நபர்களிடம் கேரளாவில் விசாரணை நடந்து வருகிறது.
குவைத் சுகாதார அமைச்சகத்தில் நர்ஸ்களாக கேரளாவை சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு பணம் தேவைப்படும் போது எல்லாம், சம்பள ஆதாரத்தை கொடுத்து, குவைத்தில் உள்ள வளைகுடா வங்கியில் கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சிறிய கடன்களை வாங்கிய இவர்கள் ,மூன்று மாதங்களுக்கு முன் பெரிய அளவிலான கடன் தொகையை பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாமல் தப்பிவிட்டனர். இந்த மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் வளைகுடா வங்கியின் துணை பொது மேலாளர் கேரளா சென்று, சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏ.டி.ஜி.,பியிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான 1400 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடிக்குப் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
English Summary
Rs 700 crore fraud at Kuwait Bank Kerala nurses under investigation