போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் வெடிகுண்டு தாக்குதல் - ரஷ்யா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடுவதையொட்டி, போரை நிறுத்த ரஷ்யா அதிபர் புடினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து கோரிக்கையை ஏற்ற ரஷ்ய அதிபர், வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போரை நிறுத்த உத்தரவிட்டார். மேலும் போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தினால் ரஷ்ய படைகள் தற்காப்பு தாக்குதல் நடத்துமா என்று தெளிவாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. கெர்சன் பகுதியில் உக்ரைன் படைகளின் தாக்குதலை ரஷ்ய படைகள் முறியடித்ததாகவும், அதன் பின்னர் போரை நிறுத்தியதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia accuses that Ukraine bombed during ceasefire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->