போர்க்கப்பல்களின் மீது உக்ரைன் தாக்குதல் - ரஷ்யா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல்களின் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இதில் 9 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்ய கப்பலின் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும், எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதின் மூலம் அனைத்து ஆளில்லா விமானங்களையும் ரஷ்ய படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செவெஸ்டோபோல் நகர ஆளுநா் மிகயீல் ரஸ்வோஷயேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் பொது கட்டமைப்பு எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும்,  4 அவசரகால உதவி படகுகள் மற்றும் 3 போர்க்கருவிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia accuses Ukraine drones attack warship in black sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->