தீவிர தாக்குதல்: "பக்முட்" நகரை கைப்பற்றிய ரஷ்யா... தொடர்ந்து போராடும் உக்ரைன் படைகள்..!
Russia announces it captured Ukraine bakhmut city
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வரும் நிலையில் உக்ரைனின் லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஜபோரிஜியா மற்றும் சோலார் நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் உக்ரைனின் கிழக்கு நகரமான பக்முட் பகுதியை கைப்பற்ற ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வந்தன.
இதனிடையே பக்முட் பகுதியில் ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்களை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் உக்ரைனின் பக்முட் நகர் முழுவதும் கைப்பற்றியதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ரஷ்ய ராணுவ உயர் மட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பக்ஹ்முட் நகரத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உக்ரைன் படைகள் தொடர்ந்து நகரை மீட்டெடுக்க போராடி வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து உக்ரைன் படைகள் அதிகமாக பக்முட் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பக்முட் நகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தன்னுடைய 60,000 வீரர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia announces it captured Ukraine bakhmut city