ரஷ்ய தாக்குதலால் இருளில் மூழ்கிய கார்கீவ் நகரம் - ஜெலன்ஸ்கி கண்டனம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய நகரங்களை மீட்க உக்ரைன் படைகள் தீவிரமாக போராடி வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள் டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை கைப்பற்றியள்ளன. இதனால் அப்பகுதியிலுள்ள ரஷ்யப்படைகள் பின்வாங்கியுள்ளன.

இதையடுத்து உக்ரைன் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு கார்கீவ் மாகாணத்தில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன.

மேலும் கார்கீவ் அனல் மின் நிலையத்தில் ரஷ்யபடைகள் ஏவுகணை மூலம் தாக்கியதால் மின்சாரம் தடைப்பட்டு கார்கீவ் உட்பட இரண்டு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியது.

இதனால் குடிநீர் வினியோகம் மற்றும் மெட்ரோ சேவைகள் தடைபட்டுள்ளதால் மக்கள் பெரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் ரஷ்ய வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்ட விரக்தியில் கார்கீவ் அனல் மின் நிலையத்தில் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், உக்ரைன் மக்கள் மின்சாரமும், குடிநீரும் இல்லாமல் தவிப்பதே அவர்களின் இலக்கு என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia attack on thermal power plant in kharkiev


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->