உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா! பிறந்த குழந்தை உள்பட 7 பேர் பலி!  - Seithipunal
Seithipunal


ரஷியா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்த அதிக அளவில் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது. 

அமெரிக்கா வழங்கிய கொத்து குண்டுகளையும் தேவையான போது உக்கரை பயன்படுத்தி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அளித்த போதெல்லாம் உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. 

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உக்ரைன் கொத்து குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது. 

இந்நிலையில் நேற்றிரவு ரஷ்யா, கொத்து குண்டுகள் மூலம் கெர்சன் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. 

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட ஏழு பேர் இறந்துள்ளனர். அதிலும் பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை மற்றும் 12 வயது சகோதரர் அவரது தந்தையுடன் உயிரிழந்துள்ளனர். 

ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia attacked Ukraine7 peoples died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->