புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கிடையே ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் உயிர் சேதமும், பொருள் சேதமும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.

இப்போரில் தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் மின் உள் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் பல லட்சம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, போரில் வெற்றி வரும் வரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து புத்தாண்டு பிறந்து அரை மணி நேரத்திற்குள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப்படைகள் ஏவுகணை மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் நகரத்தின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்து இந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia attacks on Ukraine in new year celebration


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->